தம்பிலுவில் சாயி நிலையத்தில் இன்று நடைபெற்ற இரத்ததான முகாம்



[NR]

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக நாட்டின் வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குருதி பற்றாக்குறையினை கருத்திற்கொண்டு தம்பிலுவில் சாயி நிலையத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் சாயி நிலையம் இணைத்து நடத்திய இரத்ததான முகாம் ஒன்று 2020.05.16ம் திகதி சனிக்கிழமை இன்றைய தினம் தம்பிலுவில் சாயி நிலையத்தில் நிலைய தலைவர் இ.இராசேந்திரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இன்நிகழ்வின் போது அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலை வைத்தியர் டாக்டர்.ஸாஹிரா, திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரசாத் மெண்டிஸ் அப்பு, மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ்.மனோகரன், பிரதேச பொது சுகாதார பரிசோதகர் கே.குணபாலசிங்கம், அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலை தாதிகள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் சாயி நிலைய உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இதன்போது சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்ததுடன் இரத்ததான நிகழ்வில் சுமார் 60 மேற்பட்டடோர் கலந்து கொண்டதுடன் மங்கள ஆரார்த்தியுடன் இந்நிகழ்வு நிறைவுற்றது.