அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவம்


 (லியோன்)
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக அரச சுகாதார சட்ட திட்டங்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் ஆலய உற்சவ திருவிழாக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அறிவுறுத்தலுக்கு அமைய ஆலய பகுதி சுகாதார பரிசோதகர்களின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் ஆலய மகோற்சவம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இதன் கீழ் ஆலயத்தின் மூன்றாம் நாள் மகோற்சவ உற்சவ தினமான நேற்று ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களின் உடல் வெப்பநிலை அளவிடப்பட்டு , முகக்கவசம் அணிந்து , சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.