(லியோன்)
மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு நேற்று(26) வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து ஆலய வருடாந்த திருவிழா தினத்தினை சிறப்பிக்கும் வகையில் வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலய இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலய இளைஞர் ஒன்றியமும் வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவும் இணைந்த ஏற்பாட்டில் இந்த இரத்ததான நிகழ்வு வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது
வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலய பங்கு தந்தை இன்னாசி ஜோசெப் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் கே.விவேக், வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், அருட்தந்தையர்கள், வீச்சுக்கல்முனை இளைஞர் ஒன்றியத்தின் இளைஞர், யுவதிகள், பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













.jpg)


.jpg)
.jpg)
.jpg)


