பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவித்தல்

அத்தியவசிய நடவடிக்கைகளைத் தவிர வேறு பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களின்படி அத்தியவசியமான தேவை தவிர ஏனைய பயணங்களைத் முடிந்த வரை மட்டுப்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.பி. ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா பரவுவதற்கான ஆபத்து நிலை தென்பட்டால் அது பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது அனைத்து மக்களதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வழிகாட்டுதல் களின்படி பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண் டும் என அவர் மேலும் தெரிவித்தார்.