வெளிநாடுகளில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலக ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையின் அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல்வேறு நிதி சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த ஊழியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.













