ஈச்சிலம்பற்று பகுதியில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய மூவர் கைது



(எப்.முபாரக்)
திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய மூவரை இன்று(23) கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இச் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விநாயகபுரம், ஈச்சிலம்பற்று மற்றும் வெருகல் பகுதியைச் சேர்ந்த 31,27 மற்றும் 30 வயதுடைய மூவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பட்டப்பகலில் வீட்டிலுள்ளோர் கோவிலுக்குச் சென்ற வேளையில் யன்னல் வழியூடாக புகுந்து ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான மூன்று பவுன் தங்கத்திலான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும்,மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.