அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோயிலுக்கான அடிக்கல் ஒன்றினை இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின் கோயிலாகவே நுவரெலியா சீத்தா எலிய சீதையம்மன் ஆலயம் காணப்படுகிறது.
அந்த ஆலயம் புனர்நிமாணம் செய்யப்படும்போது குறித்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் பின்பு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படும் ஶ்ரீ இராமணின் கோயிலுக்கான அடிக்கற்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் மற்றும் ஹாவாஹெலிய ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் ஆகியவற்றில் குறித்த கல்லை வைத்து விசேட பூஜைகள் செய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, குறித்த அடிக்கல்லை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4