பதினொறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் Battinews.com இணையதளம்



உங்கள் அபிமானத்தை வென்ற BATTINEWS.COM வற்றிநியூஸ் இணையதளம் இன்று பத்து ஆண்டுகளை பூர்த்தி செய்து பதினொன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

வற்றிநியூஸ் இணையதளத்தின் பத்து  ஆண்டு கால வெற்றிப் பயணத்தில் இணைந்திருந்த எமது ஊடகவியலாளர்கள்  , விளம்பரதாரர்கள்,  வாசகர்களுக்கு   எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது இந்த வெற்றிப்பாதை மேலும் தொடர எமது வாசகர்கள் எம்மோடு தொடர்ந்து பயணிப்பார்கள் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் இணையதள வரலாற்றில் பல புதிய அம்சங்களை புகுத்தி வாசகர்களை மேலும் அறிவூட்ட, தெளிவூட்ட நாம் தயாராக உள்ளோம்.

செய்தி வெளியிடுவது மாத்திரமின்றி புலம்பெயர் அமைப்புக்களின் உதவிகளோடு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் சமூக சேவைகளும் செய்து வருகிறோம் .  குறிப்பாக வெள்ளம் ,  கொரோனா காலத்தில் நிவாரண சேவையை வழங்கி இருந்தோம் மற்றும் வசதி குறைந்த பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களை  தெரிவுசெய்து அவர்களுக்கு  மாதாந்தம் உதவி தொகை வழங்கி வருகிறோம். 

கடந்த 10 வருடங்களில் 52,000 செய்திகள்  வெளியிட்டுள்ளதுடன் 103,740,000 இணையதள பார்வைகளை  ( page views ) கடந்துள்ளது . 

எம்முடன் இணைந்து பயணிக்க ஆர்வமுள்ளவர்கள் எம்மை தொடர்பு கொள்ளலாம் - தொ.இல - 0771660248 , மின்னஞ்சல் முகவரி :   info@battinews.com 
- நன்றி- 
இரா.சயனொளிபவன்  ( ஸ்தாபகர் ) & வற்றிநியூஸ் இணையதள குழுவினர்