நேசராசா அவர்கள் தனது 37 வருட ஆசிரியர் சேவையில் ஓய்வு

(சித்தா) 

 மட்டக்களப்பு , தேத்தாத்தீவை பிறப்பிடமாகக் கொண்ட இராசையாபூரணம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வன் திரு..திருநேசராசா அவர்கள் தனது 37 வருட ஆசிரியர் சேவையை தனது சொந்த கிராமமான மட்/பட்/தேத்தாத்தீவு மகாவித்தியாலயத்திலிருந்து 2021.11.01 அன்று கல்விப்பணியினை இனிதாக நிறைவு செய்து ஓய்வு பெறுகின்றார்.

                            அவர் தனது ஆரம்பக் கல்வியை மட்/பட்  /தேத்தாத்தீவு.றோ...கலவன் பாடசாலையில்  ( தற்போது மட்/பட்  /தேத்தாத்தீவு மகாவித்தியாலயம்) தொடங்கி .பொ. சாதாரண தரம் வரை கற்று தேர்ச்சி பெற்று இங்கு உயர் தரம் வரை கற்கும் வசதிகள் இல்லாத காரணத்தினால் மட்/பட்  /களுதாவளை மகாவித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி கற்று சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பேராதனை பல்கலைக்கழத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த வேளையில் 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று 1984.12.27 ஆந் திகதி முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்டு பு/ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயத்தில் கடமையேற்று ஆசிரியர் பணியை தொடர்ந்தார். எனினும் விடுபட்ட பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து 1992 இல் நிறைவு செய்து 1996 இல் பட்டப்பின் கல்வியையும் நிறைவு செய்து பயிற்றப்பட்ட டிப்ளோமா பட்டதாரியாக இன்று வரை கடமையாற்றி வருகின்றார்.

தனது சேவைக்காலத்தில் மட்/பட்  / மாங்காடு சரஸ்வதி வித்தியாலயம் , மட்/பட்  / குறுமண்வெளி சிவசக்தி வித்தியாலயம் , மட்/பட்  / தேத்தாத்தீவு..வி, மட்/பட் / கோவில்போரதீவு விவேகானந்தா..வி . மட்/பட்  / செட்டிபாளையம்..வி . மட்/பட்  / பழுகாமம் கண்டுமணி..வி ஆகிய பாடசாலைகளில்            ஆரம்பப்பிரிவு, இடைநிலைப்பிரிவு , உயர்தரம் ஆகிய வகுப்புக்களுக்கு கல்வி கற்பித்து சிறந்த பெறுபேற்றினை பெறச் செய்தார். மேலும் தரம் 5 மாணவர்களுக்கு  புலமைபரிசில் பரீட்சைக்காக கற்பித்து சிறந்த பெறுபேற்றினை பெறச் செய்தார். அத்துடன் .பொ. உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்து நாகரிகம் , இந்து சமயம் ஆகிய பாடங்களை கற்பித்து சிறந்த பெறுபேற்றினை பெறச் செய்ததோடு பல்கலைக்கழகம் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கு செல்வதற்கு முழுமையான பங்களிப்பினை செய்துள்ளார்.

                                                                                மேலும் சேவைக்காலத்தில் கற்பித்தல் செயற்பாடுகள் மாத்திரமின்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும். குறிப்பாக பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பொருளாளராகவும் ஆசிரியர் சங்க செயலாளராகவும். ஆசிரியர் அபிவிருத்திக் குழு உறுப்பினராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றியுள்ளர்.

                                                                                                திருஞான சம்பந்தர் குருகுலத்தின் ஏழை மாணவர்களுக்கு வருடாவருடம் நிதியுதவி வழங்கி வருவதோடு 2013 ஆண்டு முதல் நிருவாக சபையின் உறுப்பினராக இணைந்து குருகுல மாணவர்களின் அறநெறி அதிபராகவும், 2019 ஆண்டு முதல் குருகுல நிருவாக செயலாளராகவும் தேத்தாத்தீவு ரமண மகரிசி ஆச்சிரமத்தில் உறுப்பினராகவும் இருந்து ஆச்சிரம செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்வதோடு கடந்த 2019 ஆண்டு முதல் சிவராத்திரி தினத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை பொறுப்பேற்று சிறப்பாக  செய்து சிறந்த சமூகப்பணி ஆற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.