இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருகோணமலையில் காலடி பதித்து 200 வருடங்கள் பூர்த்தி



(ரவ்பீக் பாயிஸ்)

இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருகோணமலையில் காலடி பதித்து 200வருடங்கள் கடந்துள்ளதாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்பணி எப்பனிசர் ஜோசப் அவர்கள் தெரிவித்தார்

இந்நிலையில் 200 வது ஆண்டு நிறைவு விழாவினை இன்றைய தினம் கொண்டாடவுள்ள நிலையில் இது தொடர்பில் நேற்று (28) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை மாலை 5.00 மணியளவில் திருக்கோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தது

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்பணி எப்பனிசர் ஜோசப்

இங்கிலாந்து நாட்டிலிருந்து 1814 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருச்சபை 1821 ஆண்டு முதல் தனது கல்வி பணியினை ஆரம்பித்து பெண்களுக்கென தனி பாடசாலையினை உருவாக்கி கல்வி தொடர்பான செயற்பாடுகள் மாற்றுமல்லாது சமதான செயற்பாடுகள் மற்றும் மருந்தக செயற்பாடுகள் போன்ற செயற்ப்படுகளிலும் கால் பதித்து

திருகோணமலை மாவட்டத்தில் மெதடிஸ்த்த பாடசாலைகளாக 16 பாடசாலைகள் வரை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இலங்கை அரசினால் உள்வாங்கப்பட்டு தற்போது 07 மெதடிஸ்த்த பாடசாலைகள் இன்றுவரை செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

தொடந்து கருத்து தெரிவித்த இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்பணி எப்பனிசர் ஜோசப் அவர்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த பாடசாலை இலங்கையின் பழமையான கல்லூரி எனவும் கல்வி திணைக்களத்தினால் பிரகடனப்படுத்த பட்டுள்ளது எனவும் இன்றுவரை மெதடிஸ்த்த திருச்சபை ஊடாக சமாதானம் நல்லிணக்க செயற்பாடுகள், மொழி சார்த்த இலக்கிய செயற்ப்படுகள் என பல செயற்ப்படுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் மெதடிஸ்த்த திருச்சபையின் இன்னுமொரு அழுத்தம் தங்களுடைய சமய அர்பணிப்புக்கு ஏற்ப்ப அனைத்து மக்களுடனும் நல்லுறவினை பேணுவது என்பது எந்தக்காலத்திலும் ஏற்ற திருச்சபையாகவே மெதடிஸ்த்த திருச்சபை காணப்பட்டது என தெரிவித்தார்

தொடந்து திருக்கோணமலை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைத்தவ குரு S. W. தேவகுமார் கருத்து தெரிவிக்கையில் இன்றையதினம் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 200 வது பூர்த்தி விழாவில் திருச்சபை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முழு வரலாறு அடங்கிய LIGHT TO THE EAST நினைவு நூல் ஒன்றினையும் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்

இதன் போது இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்பணி எப்பனிசர் ஜோசப், ஜெரோம் ராசையா (youth with mission), திருக்கோணமலை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைத்துவ குரு S. W. தேவகுமார் மற்றும் வைத்தியர் ஞானகுணாலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.