அம்பாறை - அன்னமலை பிரதேச வைத்தியசாலை அவசர சேவை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்



அம்பாறை-அன்னமலை பிரதேச வைத்தியசாலை அவசர சேவை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் பிரதேச வைத்திய அதிகாரி ஆர்.வீ.ஏ.பி பண்டார தலைமையில் இடம்பெற்றது.

அவசர சிகிச்சை பிரிவு ,பல் வைத்திய கட்டிடம்,மற்றும் வெளி நோயாளர் பிரிவு நாற்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந் நிகழ்விற்கு கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அப்துல் வாஜித்,பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் எம்.சி.ம்.டி.மாஹிர்,கட்டட பிரிவின் நிறைவேற்று பொறியியலாளர் திரு அச்சுதன், வைத்திய சாலை அபிவிருத்தி குழுவினர் கிராம பிரதானிகள் என பலரும் கலந்து கொண்டனர்.