மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய தாய்லாந்தைச் சேர்ந்த 15 இளம் பெண்கள் கைது!


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக தங்கி கொழும்பு மற்றும் கல்கிஸை பிரதேசங்களிலுள்ள மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய தாய்லாந்தைச் சேர்ந்த 15 இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசா காலம் முடிவடைந்த நிலையிலேயே நாட்டில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரையும் நாடு கடத்தப்படும்வரை வெலிசறை தடுப்பு முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.