வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி நபர் கைது!வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த 4 முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.