பொலிஸ் கான்ஸ்டபிள் மீது ஆட்டோவால் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது

   

தலங்கம, கொப்பேகடுவ வீதியில் அக்குரேகொட சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குறித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தலங்கம பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.