எரிபொருட்களின் விலைகள் குறைப்பு !எரிபொருள் விலையில் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தத்தின் படி எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 440 ரூபாவாக அறிவிக்கப்பட்டது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 386 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் 245 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை மற்றும் ஒட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.