வாழைச்சேனையில் குடும்ப தகறாறில் கணவர் உயிர் மாய்ப்பு !


தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (15) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மாஞ்சோலை வீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட குடும்ப தகறாறே இவ் மரணம் ஏற்பட காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

குறித்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.