கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச !


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். இன்று காலை தேர்தல்கள் அலுவலகத்தில் அவர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏழு பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

முன்னதாக ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச மற்றும் பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.