புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (நிர்வாகம்) நியமிப்பு !




நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய நிலந்த ஜயவர்தனவை கடந்த மாதம் 18 ஆம் திகதி நடைபெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூட்டத்தின் போது கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

லலித் பத்திநாயக்க தற்போது மத்திய மாகாணத்திற்கு பொறுப்பாக சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.