துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !



ஹங்வெல்ல, நெலுவன்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 55 வயதுடைய பஸ் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டில் இருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

டி-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.