இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில், பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 9.5 சதவீதம் அதிகரித்து 1.22 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்த வருடத்தில் பதிவான அதிகூடிய மாதாந்த பெறுமதி என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட தொகையும் 577 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓகஸ்ட் மாதத்தில் வர்த்தக இருப்பு எதிர்மறையாக 430 மில்லியன் டொலர்களாக இருந்ததாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது