
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய வாக்குகளை பெறும் எனும் நம்பிக்கை எமக்கு உள்ளது, இது வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக கூட இருக்கலாம், என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும் கட்சியாக
எமது கட்சி காணப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
கடந்த காலங்களிலும் மக்களின் ஆணை மூலம் அவர்களுக்குரிய அபிவிருத்தி
உரிமை சார்ந்த விடயங்களை மிகவும் கவனமாக முன் எடுத்து வந்தோம்,
மக்களின் நம்பிக்கை பெற்றுள்ள காரணத்தினால் மக்களுக்குரிய
அபிவிருத்திகளை முடியுமான அளவு முன்னெடுத்து வந்தோம்.
புதிய அரசாங்கம் ஜனாதிபதியுடன் எதிர்காலத்தில் ஒரு இணக்கப்பாட்டுடன் ஆன அரசியலை முன்னெடுக்க நாம் தயாராக இருக்இன்றோம், என்பதை மக்கள் நன்குணர்ந்து அதற்குரிய ஆதரவை எமக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.





.jpg)




.jpg)

