சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம் !


கிழக்கில் தற்போதைய அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், நீரில் மூழ்கியுள்ள இடங்கள், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசியர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

இதன்போது, திருகோணமலை, கிண்ணியா, மூதூர், தோப்பூர், சேருவில மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேசங்கள் அவதானிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.