
(சித்தா)
இன்று (12.11.2024) சமுகக்கற்றல் மையங்களை மீண்டும் நிறுவுதல் எனும் செயற்றிட்டத்திற்கமைய வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் போரதீவுப் பற்றுக் கோட்டப் பாடசாலைகளில் பாடசாலையை விட்டு விலகிய 20 மாணவர்களுக்கு முயற்சியாண்மை கற்கைநெறியாக Cake icing பயிற்சிநெறி வலயக் கல்விப்பணிப்பாளர் சி.சிறீதரனின் வழிகாட்டலில், முறைசாராக்கல்வி இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வனின் ஒழுங்குபடுத்தலில் ஆரம்பிக்கப்பட்டது .இதில் வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் வியாபார மேம்பாட்டு உத்தியோகத்தர் என். கோகுலதாஸ், வளவாளர் திருமதி ஜெ.சுபோஜன். ஆகியோர் பயிற்சிநெறியை முன்னெடுத்தனர். பயிற்சிநெறியின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.