சீனாவின் ஆராய்ச்சி கப்பலிற்கு முன்னைய அரசாங்கம் அனுமதி மறுத்ததால் உறவுகள் பாதிக்கப்பட்டன - சீன தூதுவர் குய் ஜென்ஹாங் !


சீனாவின் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்னைய அரசாங்கம் அனுமதிமறுத்ததை தொடர்ந்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன என தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வலுவான உறவுகள் காணப்பட்ட போதிலும், முன்னைய அரசாங்கம் அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தமை ஏமாற்றமளிக்கின்ற விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

சீன கப்பல்களை மாலைதீவு வரவேற்றது ஆனால் எனினும் இலங்கை அதனை நிராகரித்ததும் நாங்கள் ஆச்சரியமடைந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.