தரம் 5 2024 புலமைப் பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு கல்வி வலய பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலை 100 வீதம் சித்தி அடைந்துள்ளதாக அதிபர் பூ.கமலதாசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் வெளிவந்துள்ள 2024 க்குரிய புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 55 மாணவர்களில் 21 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதோடு இப்பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100% சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இம் மாணவர்களையும் வழிநடாத்திய திருமதி.நிதாஜினி சிவநாதன், திருமதி.சிவாஜினி சிறீஸ் ஆகிய ஆசிரியைகளைப் பாராட்டியதுடன் பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மற்றும் பாடசாலை நலன் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்தார்