மட்டக்களப்பு பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையின் வருடாந்த சாதனையாளர் பாராட்டு விழா


(சித்தா)

மட்/பட்/பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையின் வருடாந்த சாதனையாளர் பாராட்டு விழா 2025.02.18.திகதி பாடசாலை மண்டபத்தில் அதிபர் பூ.கமலதாசன் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் - சிறீதரன் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று 21 மாணவர்களுடன் சித்தி அடைந்த அனைத்து மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்ட துடன் வருடத்தின் சிறந்த மாணவர்களுக்கான பாராட்டுக்களும் வழங்கப்பட்டதுடன் அனைத்து ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.