.jpeg)
மாத்தறை – தெவிநுவர பகுதியில் வெள்ளிக்கிழமை (21) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் ஒன்றில் வந்தவர்களால் இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் தப்பிச் சென்று சிறிது தூரத்துக்குப் பின்னர் குறித்த வேனை தீ மூட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில், எரிந்த நிலையில், வேன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மாத்தறை – தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.