.jpg)
நான்கு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் மற்றும் கொக்கேயின் போதைப்பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனும் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரும் யக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் ஆவர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர்களில் மூவர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து இன்றைய தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து ஒரு கிலோ 616 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு கிலோ 762 கிராம் கொக்கேயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , போதைப்பொருட்களை விமான நிலையத்திற்கு கொண்டு வர சந்தேக நபர்களுக்கு உதவி செய்ததாக கூறப்படும் யக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.