பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திங்கட்கிழமை(14) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்த தேசிய காங்கிரஸின் வீரமுனை வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல் #slelection #sammanthurai #battinews pic.twitter.com/Pf4NnWUvlq
— Battinews.com (@battinews) April 15, 2025