மட்டக்களப்பு, கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா.


(ரவி ப்ரியா)

பட்டிருப்பு கல்வி வலயத்தின் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா வெள்ளியன்று பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் கே.இராசசேகரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக  பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் கலந்து கொண்டார். க.பொ.த.சாதாரண தரத்தில் விசேட சித்தி பெற்ற மாணவர்களும் உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் இணைப்பாடவிதானங்களில் சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இப்பாடசாலையின்  ஸ்தாபகரும் முதலாவது அதிபருமான அமரர் வே.கிருஷ்ணனின் குடும்பத்தினரும் முன்னாள் பாடசாலை அதிபர் கே.பிரபாகரனும் முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி மாதுறுதேவி கதிரையா மற்றும் புலேந்திரன் நிர்மலாதேவி ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலையின் வரலாற்று மீள்பார்வையை ந.சதீஸ் காணொளியாக வடிவமைத்து காட்சிப்படுத்தியது சிறப்பம்சமாகும்.

மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலய மாணவர்களின் பாண்டு வாத்தியமும் பாடசாலை நடன ஆசிரியை  டிரோசா நிஷாந்தனினால் வடிவமைக்கப்பட்ட வரவேற்பு இசை நடனமும் பாராட்டு விழாவை மெருகேற்றியது. 

விழா சிறக்க ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தால் நன்றி தெரிவிக்கப்பட்டது