நீர் நிரம்பிய குழியில் விழுந்த யானையை பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“பஹட்டியா” யானையின் தலை நீரில் மூழ்காமல் இருப்பதற்காக யானையின் தலையை சுற்றி மணல் மூட்டைகள் போடப்பட்டுள்ளன.
அத்துடன், “பஹட்டியா” யானையை வெயிலிருந்து பாதுகாப்பதற்காக யானையை சுற்றி துணியினால் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
நீர் நிரம்பிய குழியில் விழுந்த “பஹட்டியா” யானைக்கு இராணுவ வீரர்கள் உணவும் வழங்கியுள்ளனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து “பஹட்டியா” யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.