
(சித்தூரான்- ந.நித்தியானந்தன்)
கிழக்கிலங்கையில் முருகன் ஆலயங்களில் வரலாற்று சிறப்பு பெற்ற சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ வள்ளிகுஞ்சர சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவில் கொடியேற்ற உற்சவமானது நேற்றைய தினம் (23) நடைபெற்றது.
பிரமோற்சவ பிரதம குரு யாழ்ப்பாணம் நைனாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் பேராலயத்தின் ஆதீன சிவகுரு சிவ ஸ்ரீ கைலாய நாதவாமதேவ குருக்கள் தலைமையில் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது.
கொடியேற்ற உச்சவத்தின் ஆரம்பத்தில் மண் விளக்கு எடுக்கப்பட்டு பின்னர் முச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆலய வன்னிமை தலைமையில் திரை சீலை ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டதும் கொடியேற்ற உற்சவ பூஜைகள் ஆரம்பமானது.
அருள்மிகு ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேதராக முருகப்பெருமான் எழுந்தருளியதுடன் கொடியேற்ற உற்சவம் ஏற்றப்பட்டது.
பின்னர் சுவாமி உள்வீதி வலம் வந்துமகோற்சவ கொடியேற்றம் இனிதே நிறைவு பெற்றது.
தொடர்ந்து 15 நாட்கள் தொடர்ந்து உற்சவம் நடைபெறும் எதிர்வரும் வியாழக்கிழமை (04.09.2025) வெள்ளிக்கிழமை(05.08.2025) சனிக்கிழமை (06.08.2025)ஆகிய நாட்கள் விசேட மயக்க கட்டு திருவிழா இடம்பெற்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை எட்டு மணிக்கு உதயன் மூலையில் அமைந்துள்ள பிரணவ தீர்த்துடன் ஆலயத்தின் தீதோற்சவத்துடன் மகோற்சவமானது நிறைவடை உள்ளது.