(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள ம.தெ.எ.ப கோட்டக்கல்வி அலுவலகத்தில் 15.09.2025 அன்று சமூகக்கற்கைநிலையம் முறைசாராக்கல்விப் பிரிவால் வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலமையில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையத்தில் பாடசாலைக்கல்வியை பூர்த்தி செய்த மற்றும் இடைவிலகிய 40 மாணவர்கள் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இங்கு அழகுக்கற்கை, தையல் பயிற்சி,கேக்ஐசிங், றெசிநாட் போன்ற பல்வேறு தொழில் முயற்சியாண்மை கற்கை நெறிகள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கி சுயதொழில் வாய்ப்பை பெற வழிப்படுத்தப்படவுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், முறைசாராக்கல்விப் பணிப்பாளர் றீற்றா கலைச்செல்வன், கல்வி நிர்வாக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், முறைசாராக்கல்வி உத்தியோகத்தர்கள், வளவாளர் நவநீதா ரகுநாதன், கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் N.கோகுலதாஸ், பயிற்சிக்காக இணைந்துகொண்ட யுவதிகள் என பலர் கலந்த கொண்டனர்.