3ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் தலைமறைவு !



மாத்தளை - தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள அதே பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

3ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (24) தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சந்தேக நபரான ஆசிரியர் பாடசாலை விடுமுறை காலத்தில் மேலதிக வகுப்பு நடத்துவதாக கூறி சில மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து கற்பித்துள்ள நிலையில், குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்து சந்தேக நபரான ஆசிரியர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.