வெள்ள நீர் பெருகியதனால் மட்டக்களப்பின் சில பகுதிகளில் போக்குவரத்து தடங்கல் !


மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையினால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால் பொதுமக்களது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சுமை தாங்கி பாலம் மற்றும் வவுணதீவு வலயறவு பாலம் ஆகியவற்றினை ஊடறுத்து வெள்ள நீர் பரவி செல்வதனால் குறித்த பகுதிகள் ஊடான போக்குவரத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இவ்வாறாக மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையினை கருத்திற்கொண்டு விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன்வைத்ததனைத் தொடர்ந்து, மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த விடையம் தொடர்பிலான கலந்துரையாடலில் முகத்துவாரம் அகழ்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய முகத்துவாரம் வெட்டப்பட்டு தற்போது வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.