கிராம உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது



கம்பஹாவில் மீரிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீரிகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான கிராம உத்தியோகத்தர் ஹலுகம பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நெலிகம மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் ஆவார்.

இவர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.