ஏறாவூரில் விபத்து : இளைஞன் பலி !


ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) பதிவாகியுள்ளது.

சந்திவேலி பகுதியிலிருந்து ஏராவூர் நோக்கி பயணித்த டிராக்டர் ரக வானகம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இளைஞன் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் மாவடிவேம்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய டிராக்டர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்;து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.