நாட்டில் பல பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !


நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும்மழை காரணமாக பல பகுதிகளுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக தாழ் நில பகுதிகளில் வசிப்பவர்கள் செவ்வாய்க்கிழமை (25) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) வரை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தெற்கு அந்தமான் கடலுக்கு அருகில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்களில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் மேலும் ஏனைய இடங்களிலும் குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி பதிவாகும் என என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.