(சித்தா)
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய கடற்கரை நகரமான கல்முனை, அதன் கலாசார வளம் மற்றும் துடிப்பான நகரப்புற வாழ்க்கையையும், ஆழமான வேரூன்றிய மரபுகளுடன் கிழக்குப் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகக் காணப்படும் கல்முனை நகரத்தினைச் சேர்ந்த செல்வரஞ்சினி - ஜெயகுலராஜன் இன்று (25.11.2025) அரச பணியில் ஓய்வு பெறுகின்றார். இவர் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றவராவார்.
கல்விப் பணியில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக 1988 ஆம் ஆண்டு இணைந்து கொண்ட இவர் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப் பட்டத்தைப் பெற்று தனது கல்வித் தகைமைகளை உயர்த்திக் கொண்டார். ஆரம்பக் கல்வி ஆசிரியராக இணைந்து கொண்டாலும் பின்னர் தமிழ் பாடத்தின் நாட்டம் காரணமாக தமிழ் பாடத்தை சாதாரண தரம், உயர்தரங்களுக்குக் கற்பித்து மாணவர்கள் தமிழ் பாடத்தில் சிறந்த சித்திகளைப் பெறுவதற்கு முன்னிண்டு உழைத்தவராவார். தனது சேவைக் காலத்தில் கமு/கமு/ஸாஹிரா கல்லூரி, கமு/கமு/கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரிகளில் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தவதில் ஆர்வத்துடன் செயற்பட்டார். குறிப்பாக பாடசாலைகளின் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுத்து கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் மனப்பூர்வமான பணியில் ஈடுபட்டு இன்று கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
பாடசாலைக் காலங்களில் கட்டுரை, கவிதை எழுதுவதில் சிறப்பு வாய்ந்தவராகக் காணப்பட்டதுடன் விளையாட்டுகளிலும், விவாதம், கூத்து, நாடகம் என்பவற்றில் நாட்டம் கொண்டவராக காணப்பட்டதன் காரணமாக பாடசாலைகளில் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் ஈட்டினார். இதன் காரணமாக கற்பிக்கும் காலங்களில் மாணவர்களை பல்வேறு போட்டிகளுக்காகத் தயார்படுத்தி கோட்ட, வலய, தேசிய மட்டங்களில் சாதனை படைப்பதற்கு உந்து சக்தியாக செயற்பட்ட இவரின் உயர் சேவையினை பாடசாலை கல்விச் சமூகம் பாராட்டி நிற்கின்றது.

.jpeg)