பிக்குணி ஒருவரைத் திட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில், பொது இடத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு (02) சந்தேக நபர்களை வத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த இரண்டு நபர்கள் பிக்குணியை திட்டி மிரட்டும் சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இந்த சம்பவம் நேற்று (02) இரவு வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ரத்னாவலி ஆராமய அருகில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 67 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று (03) வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.













