திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹப்புத்தளை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 41 மற்றும் 44 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு திருகோணமலை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.






.jpeg)





