இதன்படி, மனநல பாதிப்பால் இளைஞர்களே அதிகம் பாதிப்படுவதாகவும் அதிலும் 10 முதல் 24 வயதுடைய 39 சதவீதமானோர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்திய நிறுவனங்களில் 34 சதவீதமானோர் மனநல பாதிப்பு தொடர்பில் பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகளையும் , 38 சதவீதமானோர் மனநல பாதிப்பு தொடர்பில் பயிற்சி பெற்ற செவிலியர் அதிகாரிகளையும் கொண்டுள்ளது.
இந்நிலையில், இளைஞர்களின் மனநலம் தொடர்பிலான சேவைகளை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
குறிப்பாக 19 வயதுக்குட்பட்டவர்களில் 7 சதவீதமானோர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுடன், 35 சதவீதமானோர் வன்முறைகளில் ஈடுப்பட்டு வருவதாக தவல்கள் தெரிவிக்கின்றன.






.jpeg)





