இங்கு காபி கடையில் விற்கப்படும் இந்தக் காபி ஒரு கப் 45 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக 560 ரூபாய்) விலைக்கு விற்கப்படுகிறது. இந்தக் காபியின் மேல் அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சி தூள் தூவப்படுகிறது. உலர்ந்த மஞ்சள் கோதுமைப் புழுக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தக் காபியில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் பாரம்பரிய மூலிகைக் கடைகளில் இருந்து வாங்கப்பட்டவை என்றும், பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் இல்லை என்றும் அருங்காட்சியகம் வலியுறுத்தியுள்ளது.
பூச்சி காபியைச் சுவைக்க இளைஞர்கள் தான் அதிக அளவில் வருகிறார்கள். தற்போது, ஒரு நாளைக்குச் சராசரியாக 10 கப் காபி விற்பனையாகிறது. கரப்பான் பூச்சி தூள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் . புரதம் நிறைந்த உணவான கோதுமைப் புழுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
கரப்பான் பூச்சி காபியைத் தவிர, அருங்காட்சியகம் பலவகையான பூச்சிகளைப் பயன்படுத்திப் பல்வேறு பானங்களை விற்பனை செய்கிறது.
கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






.jpeg)





