மக்களுடன் அபயம்” – வாகரை & செங்கலடி பகுதிகளில் வெள்ள நிவாரண உதவிகள்

அண்மையில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அபயம் அமைப்பு தனது “மக்களுடன் அபயம்” நிவாரணத் திட்டத்தின் கீழ் அவசர உதவிகளை வழங்கியுள்ளது.

வாகரைப் பிரதேச செயலகத்திலிருந்து கிடைத்த கோரிக்கைக்கு இணங்க, கதிரவெளி – வாகரை முகாமில் தங்கியிருந்த சுமார் 70 பேருக்கு  நேற்று (30) அபயம் சார்பில் 100 படுக்கை விரிப்புகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. 

வெள்ளத்தால் அடிப்படை தேவைகளிலும் சிரமத்தை எதிர்கொண்ட மக்களுக்கு இந்த உதவி உடனடி நிவாரணமாக அமைந்தது.


இதனுடன், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செங்கலடி பிரதேசத்திற்குள் மொத்தம் 800 குடும்பங்களுக்கு இன்று(01)நிவாரண உதவி வழங்கப்பட்டது. உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உபயோகப்பொருட்கள் அபயம் அமைப்பு உறுப்பினர்களால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டன.