கிறிஸ்தவ மதகுருவை தாக்கிய கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 06 பொலிஸார் கைது !


கிறிஸ்தவ மதகுரு ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் 06 பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, நாளை திங்கட்கிழமை (26) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.