அரச சேவையில் புதிய நியமனங்கள்: 23,344 ஆசிரியர்களுக்கு வாய்ப்பு !


அரசு சேவையில் நிலவும் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் 26,095 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் உச்சபட்சமாக இலங்கை ஆசிரியர் சேவையில் 23,344 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மேலும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு (705), நீதி அமைச்சு (452), கல்வி அமைச்சு (442) உள்ளிட்ட பல அமைச்சுக்களுக்கும் புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.