6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான அமைச்சரவை தீர்மானம் !


2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மறுசீராய்வு செய்து, அவற்றை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

6 ஆம் தரத்திற்கான ஆங்கில பாடப்புத்தகத்தில் ஏற்பட்ட சர்ச்சையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், 1 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை இந்த ஆண்டு நடைமுறைத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.