இந்நிலையில் , யாழ்ப்பாண கோட்டை பகுதிக்கு திங்கட்கிழமை (26) தமிழரசு கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் , கோட்டை பகுதியில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொல்லியல் திணைக்கள உத்தியோகஸ்தர்களுடனும் கலந்துரையாடினார்.
அதேவேளை கோட்டை பகுதியை சுற்றியுள்ள தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சுற்றி தொல்லியல் திணைக்களத்தினால் , எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளது.
எல்லை கற்கள் நாட்டுவது குறித்து, எந்த தரப்புடனும் கலந்துரையாடாது , அவற்றை நாட்டியுள்ளமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றினையும் சுமந்திரன் பார்வையிட்டார்.
முற்றவெளி மைதானம் தொல்லியல் திணைக்களத்திற்குள் வருவதனால் , அவற்றினையும் சுற்றி எல்லை கற்கள் நடப்பட்டுள்ளமையால் , இம்முறை நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது வாகன தரிப்பிடத்திற்கு இடம் இல்லாது , வீதிகளிலையே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







.jpeg)





