தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் ஹபரணை, ஹிரிவடுன்ன பகுதியில் சிறிய லொறி ஒன்று நோயாளர் காவு வண்டியுடன் மோதி இன்று (25) நண்பகல் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளர் காவு வண்டியில் வந்த நோயாளி ஒருவரும் காயமடைந்துள்ளதோடு, அதன் சாரதியும் மற்றுமொரு பெண் ஊழியரும் காயமடைந்து அவர்களும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் ஹபரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நோயாளர் காவு வண்டி தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கியும், லொறி ஹபரணையிலிருந்து தம்புள்ளை நோக்கியும் பயணித்துள்ளன.
லொறி சாரதியின் கவனயீனமே இந்த விபத்திற்குக் காரணம் என ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










.jpeg)


