புத்தளம், சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த காதலன் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பங்கதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய காதலனே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
13 வயதுடைய சிறுமி ஒருவர் தனது பணி இடத்தில் உள்ள சந்தேக நபருடன் நீண்ட காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், டிசம்பர் 26 ஆம் திகதி சந்தேக நபரான காதலன் சிறுமி தங்கியுள்ள வாடகை வீட்டிற்குச் சென்று சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, இதனை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
பின்னர் சிறுமிக்கும் சந்தேக நபரான காதலனுக்கும் இடையிலான காதலன் உறவு முறிந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமி மற்றுமொரு இளைஞனுடன் காதலன் உறவில் ஈடுபட்டுள்ள நிலையில் தனது வாடகை வீட்டில் வைத்து, தனக்கு நேர்ந்த துயரத்தை அந்த இளைஞனிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த வாடகை வீட்டின் பெண் உரிமையாளர், இது தொடர்பில் சிறுமியின் தாயிடம் கூறியுள்ளார்.
பின்னர் சிறுமியின் தாய் இது தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரான காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)








.jpg)